முகப்பு
ஆன்மிகம்

கங்கை அம்மன் கோயிலில் யாத்திரைத் திருவிழா

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன் கோயிலில் 58-ஆம் ஆண்டு யாத்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மே 2013, 3:38 am IST
பகிர்:

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன் கோயிலில் 58-ஆம் ஆண்டு யாத்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கையம்மன் கோயில். இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் யாத்திரைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  இந்த ஆண்டு 58-வது யாத்திரைத் திருவிழா மே 19-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி ஆண் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பெண் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்து

வழிப்பட்டனர். செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் அம்மனுக்கு பாலாபிஷேகம், பழம் குத்துதல், கூழ் வார்த்தல், குடம் சுற்றுதல், ரதம் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்  காப்பு கட்டிய ஆண் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுந்தனர்.

Advertisement

Advertisement

÷பின்னர் டிராக்டரில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தல், பொக்லைன் இயந்திரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வழிபட்டனர்.

 கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், வெங்கத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.