ஆன்மிகம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்கை கொண்ட சோழபுரத்தில் தொல்லியல் கழக ஆண்டு விழா, கருத்தரங்கம்

தினமணி

தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக கங்கைகொண்ட சோழபுரம் திகழ்கிறது. சோழ மன்னர்களில் இராஜராஜசோழனின் மைந்தனான ராஜேந்திரசோழன் கடல்கடந்து கப்பற்படை நடத்தி கடாரட் வென்று புகழ்பெற்று விளங்கினான். தனது கங்கை வெற்றியின் நினைவாக இவ்வூர் ஏற்படுத்தினான்.

இங்குள்ள கலை நயமிக்க சிற்பங்களுடன் காட்சி அளிக்கும் திருக்கோயில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என அழைக்கப்படுகிறது. தலைநகரை அமைக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஏரி சோழகங்கம் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து சோழமன்னர்களின் தலைநகராக 300 ஆண்டுகள் விளங்கிய பெருமை உடையது கங்கை கொண்ட சோழபுரம். இவ்வூரின் பெருமைகளை திருவாலங்காடு - எசாலம் செப்பேடுகள் எடுத்துக் கூறுகின்றன.

வரலாற்றுச்சிறப்பு மிக்க இவ்வூரில் தமிழகத் தொல்லியல் கழகம் - கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தினை 22, 23.07.17 ஆகிய நாட்களில் நடத்துகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் கல்வெட்டுகள் பெண்ணாகடம் கோயில்கள் போன்ற நூல்கள் வெளியிடப்பெறுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகப் பேராசியர் - தொல்லியல் அறிஞர் ப.சண்முகம் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது.

மேலும் அறக்கட்டளைகள் சார்பாக தொல்லியல் தொடர்பான சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. தொல்லியல் தொடர்பான கண்டுபிடிப்புகள் அடங்கிய நூல் ஆவணம் - இதழ் 28 வெளியிடப்படுகிறது.

சிறப்பான வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் பற்றிய கண்காட்சி நடைபெறுகிறது. கல்வெட்டுகள் வாசிப்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்நிகழ்வில் அறிஞர்கள், வரலாற்று வல்லுநர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

தொடர்புக்கு: பொறியாளர் இரா.கோமகன் - 9443849692

தகவல் - கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT