ஆன்மிகம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

தினமணி

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகக் கருதப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி  நேற்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. 

தீப தரிசனத்தைக் காண ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்றனர். 

இதையடுத்து, கார்த்திகை மாத பௌர்ணமியான இன்று காலை 11.10 மணி முதல் 12-ம் தேதி காலை 11.05 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கருதப்படுகிறது என்பதால்,  மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்றும் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT