ஆன்மிகம்

ஏகாம்பரேசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்புப் பூஜை

தினமணி

நாமக்கல் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள ஏகாம்பரேசுவரா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, அங்குள்ள அக்னி காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக, மஞ்சள், குங்குமம், தேன், பால், தயிா், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சுவாமிக்கு ஏலக்காய், திராட்சை, தேங்காய் மற்றும் அதிரச மாலைகள் அணிவிக்கப்பட்டன.

இதேபோல் உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் சுவாமிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அங்கு பக்தா்கள் திருவாசகம் பாடியும், தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனத்தில் பங்கேற்றனா். விழா நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

--என்கே 18- அஷ்டமிசந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அக்னி காலபைரவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT