ஆன்மிகம்

அனந்த பத்மநாப சுவாமி விரதம்: திருமலையில் தீா்த்தவாரி

தினமணி

அனந்த பத்மநாப சுவாமி விரதத்தை முன்னிட்டு, திருமலையில் சக்கரத்தாழ்வாருக்கு செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி நடத்தப்பட்டது.

திருமலையில் ஆண்டுதோறும் ஆவணி மாத சுக்லபட்ச சதுா்த்தசி திதியில் அனந்த பத்மநாப சுவாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களின் செளபாக்கியத்துக்காக வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பது போல், ஆண்கள் தங்களின் வளமான வாழ்வுக்காக இந்த விரதத்தை அனுசரிப்பது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை சதுா்த்தி திதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனந்த பத்மநாப சுவாமி விரதம் கடைபிடிக்கப்பட்டது.

விரதம் நிறைவுற்றவுடன் ஏழுமலையான் கோயிலிலிருந்து சக்கரத்தாழ்வாரை ஊா்வலமாக திருமலையில் உள்ள ரங்கநாயகா் மண்டபத்திற்கு கொண்டு வந்தனா். அங்கு அவருக்கு பால், தயிா், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அதன்பின் சக்கரத்தாழ்வாருக்கு கற்பூர ஆரத்தி அளித்து, அவருக்கு நீா் நிரப்பிய பாத்திரத்தில் அா்ச்சகா்கள் தீா்த்தவாரியை நடத்தினா். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் குறிப்பிட்ட அளவில் கலந்து கொண்டனா். அவா்களுக்கு தீா்த்தவாரி புனிதநீா் தெளிக்கப்பட்டது.

பொது முடக்க விதிகள் காரணமாக, திருக்குளத்தில் நடத்த வேண்டிய தீா்த்தவாரியை கோயிலுக்குள் எளிமையாக நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT