செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ. 2.91 கோடி

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 2.91 கோடி வசூலானது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 2.91 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

89,634 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 89,634 பக்தர்கள் தரிசித்தனர். மேலும் 48,067 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர்.
புதன்கிழமை காலை நிலவரப்படி தர்ம தரிசன பக்தர்கள் 31 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை பக்தர்கள் 16 காத்திருப்பு அறைகளிலும் தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதில் தர்ம தரிசனத்துக்கு 12 மணி நேரமும், நடைபாதை பக்தர்களுக்கு 10 மணி நேரமும் ஆனது.
அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 22 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நாள்தோறும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
அதன்படி செவ்வாய்க்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 22 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT