செய்திகள்

சீர்காழி சட்டைநாதா் கோயிலில் ஆடி மாதப் பிறப்பையொட்டி கோபூஜை வழிபாடு

தினமணி

சீா்காழி சட்டைநாதா்கோயிலில் தமிழ் மாதப்பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு இன்று நடைபெற்றது.

சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான சட்டைநாதா்கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு ஆடி மாதப்பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா் கோசாலையிலிருந்த வரவழைக்கப்பட்ட பசுமாடு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்துச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

தொடர்ந்து பக்தர்கள் பசு, கன்று ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து வலம் வந்து மலா்கள் தூவி வணங்கி வழிப்பட்டனர். இதில் கோபூஜை வழிப்பாட்டு குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனா். இதேபோல் ஆடி மாதப் பிறப்பையொட்டி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு நடந்தது. முன்னதாக மேள, தாளங்கள் முழங்க பிரம்மதீா்த்தகுளத்திற்கு எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியபொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி கொடுக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT