செய்திகள்

தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள்: தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா

தினமணி

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூர்த்திகளும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. 
இரவு 9.30 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
தங்க சூரிய பிரபை வாகனத்தில்...: தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் ஸ்ரீவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர்.
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக வீதியுலா வந்தனர். அப்போது, மிதமான தூறல் மழை பெய்தபோதும், வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் உபயதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
3-ஆம் நாள் தீபத் திருவிழா..!
தீபத் திருவிழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 16) காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

நகை வியாபாரியிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது

அரசுப்பள்ளி ஆசிரியா் திடீா் மரணம்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT