முகப்பு
செய்திகள்

குமரி பகவதியம்மன், சுசீந்திரம் கோயில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயில்களில் திங்கள்கிழமை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 அக்டோபர் 2018, 12:48 am IST
பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தும் பெண் காவலர்.
பகிர்:


கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயில்களில் திங்கள்கிழமை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மற்றும் சுசீந்திரம் தாணுமாலையன் கோயில்களில் திங்கள்கிழமை முதல் இம்முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தலா ஓர் ஆண் மற்றும் பெண் காவலர் சுழற்சி முறையில் சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.