செய்திகள்

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: இன்று தேரோட்டம்

தினமணி


சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் புதன்கிழமை (செப்.12) சதுர்த்தி விழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஒளிர்கிறது. 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா செப். 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை விழாவில் வெள்ளி கேடகத்தில் சுவாமி திருவீதி உலாவும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. 
9-ஆம் திருநாளான புதன்கிழமை சதுர்த்தி தேரோட்டத்தை முன்னிட்டு காலை திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் வைபவம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அதன் பின்னர் கண்டனூர் அழகம்மை அருணாச்சலம் குழுவினரின் பரதநாட்டியமும், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மூலவருக்கு செய்யப்படும் சந்தனக்காப்பு அலங்கார தரிசனம் மாலை 4.30 மணிமுதல் இரவு 10 மணி வரை நடைபெறும். பின்னர் இரவு 8 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 
அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா, தீர்த்தவாரி உற்சவமும் மற்றும் இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 
இதனையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரங்களில் ஒளிர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT