செய்திகள்

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதம்

தினமணி

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை அனந்த பத்மநாப சுவாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது.
 உலகத்தை தன் தலை மேல் தாங்கும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை அனந்த பத்மநாப சுவாமியாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
 திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தி நாளில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தை தேவஸ்தானம் கடைப்பிடித்து வருகிறது. பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பது போல், ஆண்கள் நீங்கா செல்வத்தைப் பெற அனந்த பத்மநாப சுவாமி விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம்.
 இந்த விரதத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அர்ச்சகர்கள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT