செய்திகள்

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

தினமணி

புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதேபோல், புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள் தூள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல் 1.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT