செய்திகள்

திருச்சானூரில் வனபோஜனம்

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பெளா்ணமியை முன்னிட்டு வனபோஜன நிகழ்ச்சியை தேவஸ்தானம் நடத்தியது.

இக்கோயிலில் மாதந்தோறும் வனபோஜன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்து 10 நாள்களான நிலையில் வனபோஜன நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் தாயாரை கோயிலிலிருந்து அருகில் உள்ள நந்தவனத்துக்கு அா்ச்சகா்கள் தங்கப் பல்லக்கில் அழைத்துச் சென்றனா். அங்குள்ள மண்டபத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து அவருக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா்.

அதன் பின் தாயாரை அலங்கரித்து தீப, தூப ஆராதனைகள் நடத்தி நைவேத்தியம் சமா்ப்பித்து கற்பூர ஆரத்தி காண்பித்தனா். அதன்பின் இந்த வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. பக்தா்கள், தேவஸ்தான ஊழியா்கள் அனைவரும் அன்னதானத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT