செய்திகள்

கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா

தினமணி

சோழ வளநாடான தஞ்சை மாவட்ட காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள கோயில் மாநகரம் என அனைவராலும் அழைக்கப்படும் குடந்தை மாநகரில் 1000 வருடங்கள் கடந்து மிளிரும் மூர்த்தி தலம் தீர்த்தம் என மூன்றிலும் மட்டுமல்லாமல் சைவ நாயன்மார்கள் மற்றும் வைணவ ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைந்த கும்பகோணத்தில் அமையப்பெற்றுள்ள உலகபுகழ் பெற்ற  மகாமகக்குளத்தில் இந்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மாசிமகப்பெருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு, கும்பகோணம் அருள்மிகு 

1. ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர் 
2. சோமசுந்தரி சமேத வியாழ சோமேஸ்வரர் 
3. அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர் 
4. விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர்
5. ஞானாம்பிகா சமேத காளஸ்திஸ்வரர்
6. சௌந்தரநாயகி சமேத  கௌதமேஸ்வரர் ஆகிய சைவ சிவாலயங்களில் 10-2-2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று பகல்  1.30 மணிக்கு மேல்  1.55  மணிக்குள் கொடியேற்றமும் (அபிமுகேஸ்வரர் ஆலய கொடியேற்றம் அதே தினத்தில் காலை  8.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்) அதை தொடர்ந்து  தினசரி  காலை மாலை இருவேளைகளில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா திருகாட்சியும், 14-2-2019 வியாழக்கிழமை  அன்று  இரவு  7.00 மணியளவில் சிறப்பு மின் விளக்கு அலங்காரத்துடன் ஓலைச்சப்பர வீதியுலாவும், 18-2-2019 திங்கட்கிழமை அன்று இரவு 7.00 மணியளவில் ஆதிகும்பேஸ்வரர் ஆலய பஞ்சமூர்த்திகள் ரதத்தில் புறப்பாடும், 19.2.2018 செவ்வாய்க்கிழமை மாசி மகத்தன்று காலை 12 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் மகாமககுளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

மேலும் கும்பகோணத்தில் உள்ள வைணவ தலங்களானஅருள்மிகு 

1.ஸ்ரீசுதர்சனவல்லி  ஸ்ரீவிஜயவல்லி சமேத ஸ்ரீ சக்கரபாணி
2.ஸ்ரீ அம்புஜவல்லி சமேத ஸ்ரீஆதி வராஹ பெருமாள் 
3. ஸ்ரீருக்மணி ,ஸத்யபாமா ,செங்கமலத் தாயார் சமேத இராஜ கோபாலசுவாமி (பெரிய கடைத்தெரு) ஆகிய திருக்கோயில்களில் மாசிமகப் பெருவிழாவையெட்டி 11-2-2019 திங்கட்கிழமை  காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கொடியேற்றமும் அதை தொடர்ந்து தினசரி காலை மாலை இருவேளைகளில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா திருகாட்சியும் 14.2.2019 வியாழக்கிழமை இரவு கருட சேவை, ஓலைச்சப்பரமும் 19-2-2019-செவ்வாய்க்கிழமை மாசி மகத்தன்று ஸ்ரீசக்கரபாணி திருகோவிலில் காலை 8.15மணிக்கு மேல் 8.45 மணிக்குள் திருத்தேரோட்டம் மாலை தீர்த்தவாரியும் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயிலில் மாசிமகத்ததன்று மாலை திருக்கோயில் குளமான பொற்றாமரை திருக்குளத்தில் உற்சவ நாச்சியார்களுடன் ஸ்ரீஆராவமுதப் பெருமாள் எழுந்தருள தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த திருக்கோவில்களின் அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து  வருகின்றார்கள்.


குடந்தை ப.சரவணன் - 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT