நட்சத்திரக் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி மகாயாகம்
ராகு-கேது பெயர்ச்சியையொட்டி நட்சத்திரக்கோயிலில் மகாயாகம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
ராகு-கேது பெயர்ச்சியையொட்டி நட்சத்திரக்கோயிலில் மகாயாகம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
ராகு, கேது பெயர்ச்சி புதன்கிழமை நண்பகல் நடைபெற்றது. இதையொட்டி, காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை, கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திரக் கோயிலில் ராகு,கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதன்படி, புதன்கிழமை காலை 9 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நவ கலச ஸ்தாபனம், ராகு,கேது பெயர்ச்சி மகா யாகம் நடத்தப்பட்டது. அத்துடன், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, தோஷமுள்ள 21 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.