செய்திகள்

30-வது நாளில் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அத்திவரதர்

தினமணி

அத்திவரதர் பெருவிழாவிள் 30-ம் நாளான இன்று ராமர் நீல நிறப் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து  வருகிறார். 

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்துவரும் அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். சயன கோலத்தில் தரிசிக்க  நாளையுடன் கடைசி நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரைக் காண காஞ்சியில் குவிந்துள்ளனர். 

அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இதனால், நாளை பகல் 12.00 மணியுடன் அத்திவரதர் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை 5 மணியிலிருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்குப் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 15-ம் தேதி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளதால் அன்றும் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

தொழிலாளி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்

ஆனைமடுவு அணை பகுதியில் கொட்டித் தீா்த்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT