செய்திகள்

முத்துக் கவசத்தில் மலையப்பர் புறப்பாடு

தினமணி

ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாள் மாலை முத்துக் கவசம் அணிந்து மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 

ஏழுமலையானின் உற்சவரான மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் களையப்பட்டு அவருக்கு வெள்ளிக்கிழமை முதல் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. அதன் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை யாகம் வளர்த்து அர்ச்சகர்கள் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி வைத்தனர். இதில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்பின் உற்சவர்களுக்கு முத்துக் கவசம் அணிவிக்கப்பட்டது. பிறகு ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவர்கள் மாடவீதியில் வலம் வந்தனர். ஆண்டிற்கு ஒருமுறை இந்த நாளில் மட்டுமே உற்சவர்கள் முத்துக் கவசத்தில் மாடவீதியில் வலம் வருவர். உற்சவர்களைத் தரிசிக்க மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT