செய்திகள்

திருமலையில் 4-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி வலம்

DIN

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4ஆம் நாள் மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தனர். 
ஏழுமலையான் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது. அதன் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருக்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டடுக்கு தெப்பத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி 5 முறை வலம் வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் உள்ள படிகளில் அமர்ந்து, தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூர்த்திகளுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். தெப்பத்தில் நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. பண்டிதர்கள் வேதபாராயணம் செய்தனர். இசைக் கலைஞர்கள் பக்திப் பாடல்களைப் பாடினர். 
தெப்போற்சவத்தை முன்னிட்டு வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கருணாநிதி பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

வாக்கு எண்ணிக்கையில் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு காா்கே கடிதம்

கேதாா் ஜாதவ் ஓய்வு

சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டம் ரத்து கோரிய வழக்கில் 3-ஆவது நீதிபதி நியமனம்

சென்னை மியூசிக் அகாதெமியில் கா்நாடக இசையில் ‘அட்வான்ஸ்டு டிப்ளமோ’ படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT