செய்திகள்

பழனி ரோப்கார் நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தம்

தினமணி

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நாளை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய  படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.  

இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும்.

இந்த ரோப்கார் தினமும் மதியம் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும்  பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் (மார்ச் 27) மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT