செய்திகள்

ஏரிவாக்கம் சாய்பாபா தியான நிலைய கும்பாபிஷேகம்

தினமணி


காஞ்சிபுரத்தை அடுத்த ஏரிவாக்கம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாய்பாபா தியான நிலையத்தின் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
இப்பகுதியில் அற்புத சாய்பாபா, கல்வி கணபதி, வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு தியான நிலையம் அண்மையில் அமைக்கப்பட்டது. அந்த தியான நிலையத்தின் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 14-ஆம் தேதி அனுக்ஞை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.  
இதைத்தொடர்ந்து, 15-ஆம் தேதி சப்த நதி தீர்த்தம் வீதி வலம் வருதல், ரக்க்ஷôபந்தனம், சக்தியாகர்ஷணம், கும்பங்கள் யாக சாலை பிரவேசம், அக்னி பிரதிஷ்டை, பிரதான ஹோமங்கள், வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை, கர்மாங்க ஸ்நபன திருமஞ்சனம், கும்பம், மண்டல, பிம்ப, துவார, அக்னி சதுஸ்தான ஆராதனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
இதையடுத்து, வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் கோ பூஜையுடன் தொடங்கி விஸ்வரூபம், கும்ப மண்டல பிம்ப, துவார, அக்னி சதுஸ்தான ஆராதனம், பிராண பிரதிஷ்டா ஹோமம் உள்ளிட்ட சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர், காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இதில், கலந்துகொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், விழாக் குழுவினரும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT