செய்திகள்

கும்பகோணத்தில் 3 வைணவ தலங்களில் கொடியேற்றம்!

DIN

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டு தோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைண தலங்களுடன் இணைந்து ஒருசேர பத்து நாள் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டிற்காண மாசிமக பிரமோற்சவத்தின் துவக்கமாக நேற்று காசிவிஸ்வநாதர் கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் என 5 சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. பிற ஆறு சைவத்தலங்களில் மாசிமகப்பெருவிழா ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது.

இதனையடுத்து, இன்று வைண ஸ்தலமான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாட்சார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள் வாத்தியங்கள் ஒலிக்க, ஸ்ரீ பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றபட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோன்று இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் ஆகிய வைணவ தலங்களிலும் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மாலையில் சூரிய பிரபை, ஷேச வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 24ஆம் தேதி சனிக்கிழமை காலை சக்கரபாணிசுவாமி திருத்தேரோட்டமும், நண்பகல் 12 சைவத்திருத்தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும் ஒருசேர எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது. இத்தீர்த்தவாரி நிகழ்வின் போது, ஏராளமானோர் மகாமக திருக்குளத்திலும், காவிரியிலும் புனித நீராடி கரைகளில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவாமிகளை தரிசனம் செய்வார்கள். என்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT