திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தென் கயிலாயம் எனப் போற்றப்படுவதும், 274-சைவத் தலங்களுக்குள் ஈடு இணையற்றதாகவும் சிறப்பு பெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர் (சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்க குதிரை, நந்திகேசர், கைலாச பர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 26ஆம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்குக் காட்சியளித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை (6.30) தொடங்கியது. மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் சென்றன.
தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
Thousands of people participated in the Chithirai chariot festival at the Thayumanaswamy Temple in Trichy Rockfort.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.