காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தேரோட்டம்..
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திர உத்திர பெருவிழா உற்சவத்தின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற திருத்தலம் என அழைக்கப்படும், சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் கடந்த 24ம் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
சித்திரை உத்திர பெருவிழாவின் 7-ம் நாளான இன்று திருத்தேர் உற்சவத்தில் கச்சபேஸ்வரர் எழுந்தருளும் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Advertisement
Advertisement
தேர் உற்சவத்தை ஒட்டி சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாவணங்கள் மலர் மாலைகள் அணிவித்து, திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர்.
பின்னர், மேளதாளங்கள் முழங்கத் தேரில் எழுந்தருளிய கட்சபேஷ்வரரை பக்தர்கள் வடம் பிடித்து நான்கு ராஜ வீதிகளில் அரோகரா கோஷத்துடன் இழுத்துச் சென்றனர்.
திருத்தேர் வீதி உலா வந்த காஞ்சி கச்சபேஸ்வரரை வழியெங்கும் திரளான பக்தர்கள் காத்திருந்து தீபாராதனை காட்டி வணங்கி வழிபட்டுச் சென்றனர்.
Today, on the 7th day of the Chithira Uthira Grand Festival at the Kanchipuram Kachabeswarar Temple, the chariot procession was celebrated with great grandeur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.