FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் ஆலங்குடி சனீஸ்வர பகவான்
பகிர்:

சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசம் செய்ததை முன்னிட்டு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று (மார்ச் 6)ல் நடைபெற்றது.

குருபகவானுக்குப் பரிகார தலமான இக்கோயிலில் சனீஸ்வர பகவான் மேற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சனிபகவான் இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீனராசிக்கு பிரேவசம் செய்ததை முன்னிட்டு சனீஸ்வர பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சி. வீரபாண்டியன், செயல் அலுவலர் சு.ராஜா இளம்பெருவழுதி, கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

இதேபோல் நீடாமங்கலம் காசி விசுவநாதர் கோயிலிலும் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

summary

The Shani Peyarchi festival was held today (March 6) at the Aapdsakayeswarar Guru Parikara Temple in Alangudi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments