முகப்பு
செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் மே 19 வரை நடை திறப்பு!

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சபரிமலை - DPS
பகிர்:

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை, தமிழ் மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படுகிறது.

அதன்படி, வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ஆம் தேதி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையை திறந்துவைத்தார்.

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாள்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

summary

With the sanctum sanctorum of the Sabarimala Ayyappan Temple having been opened yesterday evening for the Vaikasi month pooja, devotees were permitted to offer worship starting this morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.