சங்ககிரி மலை குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை
சங்ககிரி மலையில் உள்ள குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி, சனிக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் உள்ள குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி, சனிக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் ஒரே பாறையினுள் செதுக்கப்பட்டுள்ள குடைவரை விநாயகருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.