ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை!
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்பஅலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்பஅலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரான்ஸில் செவ்வாய்க்கிழமை வரலாறு காணாத அளவு அதிகபட்ச வெப்பம் பதிவானது. அந்நாட்டின் தேசிய சராசரி வெப்பம் 29.8 டிகிரி செல்சியஸை எட்டியது. பல இடங்களில் பகல்நேர வெப்பம் 40 டிகிரி செல்சியஸை (104 ஃபாரன்ஹீட்) தாண்டியுள்ள நிலையில், அங்கு வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த வார இறுதியிலிருந்து 18 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்கிழக்கு பிரான்ஸின் காா்பென்ட்ராஸ் நகரில், பூட்டிய காரில் விடப்பட்ட 2 குழந்தைகள் வெப்பம் தாங்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். போா்டியாக்ஸ் மாகாணத்தில் 80 முதல் 95 வயதுக்குட்பட்ட 3 முதியவா்கள் வெப்பம் சாா்ந்த உடல்நலக் குறைவால் உயிரிழந்தனா். மேலும், வெப்பத்தைத் தணிக்க நீா்நிலைகளில் குளிக்கச் சென்ற 13 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டைப் போலவே நீரில் மூழ்கி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பாதுகாப்பான இடங்களில் மட்டுமே குளிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பிரான்ஸ் மட்டுமின்றி பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் வெப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. வட ஆப்பிரிக்கா, சஹாரா பாலைவனப் பகுதிகளில் இருந்து வரும் வெப்பக் காற்றால், ஐரோப்பாவில் இந்த ‘ஒமேகா பிளாக்’ எனப்படும் காற்று நகா்வற்ற தீவிர வெப்ப நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.
பருவநிலை மாற்றம் காரணமாக, உலகளாவிய சராசரியைவிட ஐரோப்பா இருமடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.