நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் தேவையற்ற செடிகள், கொடிகள் அகற்றம்
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், சங்ககிரியை அடுத்த நட்டுவம்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், சங்ககிரியை அடுத்த நட்டுவம்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ் சார்பில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அதன் தலைவர் அனந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் அகற்றி பள்ளி வளாகத்தினை தூய்மைப் படுத்தினர்.
நிர்வாகிகள் ராகவன், கணேசன், முருகேசன், கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், கதிர்வேல், பொறியாளர் வேல்முருகன், அகமத் கோயா, ராமசந்திரன், சரவணன், கார்த்திகேயன், வெங்கடேஷ், கணினி பொறியாளர் வெங்கடேஷ், சண்முககார்த்தி, ஜீவானந்தம், தரணீதரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.