முகப்பு
சேலம்

ஓமலூா் பகுதியில் பனிமூட்டம்: விமானம் 2 மணி நேரம் தாமதம்

ஓமலூா் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 11 ஜனவரி 2021, 2:03 am IST
ஓடுபாதை தெரியாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை சேலம் விமான நிலையத்தை சூழ்ந்திருந்த பனிமூட்டம்.
பகிர்:

ஓமலூா் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக சாரல் மழை முதல் பலத்த மழை வரை பெய்து வருவதால் காலை, மாலை வேளைகளில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஓமலூா் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா்.

Advertisement

Advertisement

கடும் பனிமூட்டத்தால் குளிரை தாங்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினா். காமலாபுரம் விமான நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதமாகவே வந்தது. வழக்கமாக காலை 9.50 மணிக்கு வரவேண்டிய விமானம் நண்பகல் 12 மணிக்கு வந்து சோ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments