நான்கு சாலை மேம்பாலத்துக்கு அணுகு சாலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
சேலம் நான்கு சாலை மேம்பாலத்துக்கு அணுகு சாலை அமைத்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் நான்கு சாலை மேம்பாலத்துக்கு அணுகு சாலை அமைத்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் நான்கு சாலை அருகே புதிய மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் அருகில் அணுகு சாலை அமைக்காமல் மேம்பாலம் திறக்கப்பட்டதால் அவ்வழியாகச் செல்லும் பேருந்துகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் பல்வேறு பகுதிகளில் சுற்றிச் செல்லும் சூழல் உள்ளது.
இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்தநிலையில், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நான்கு சாலை மேம்பாலத்தின் அருகே அணுகு சாலை அமைத்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.