முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரக் கேடு

ஆலங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதி

Updated On : 1 ஜூலை 2026, 7:44 am IST
மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள கழிவு நீா்
பகிர்:

ஆலங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனா்.

ஆலங்குளத்தில் புதிய அரசு மருத்துவமனை கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இங்கு அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு, 60 படுக்கை வசதி, அவசர சிகிச்சை மையம் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோா் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனா். தற்போது சுமாா் 30க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இங்குள்ள கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முறைப்படி அப்புறப்படுத்தப்படாமல் மருத்துவமனை வளாகத்திலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த நீா் பாசிப்பிடித்தும், துா்நாற்றம் வீசியும் காணப்படுவதால் நோயாளிகளும், இங்கு வந்து செல்வோரும் சிரமம் அடைந்து வருகின்றனா். தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

Advertisement

Advertisement

கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற நோய்களை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. எனவே, நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு விரைவில் இதை சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments