முகப்பு
சேலம்

‘தீ’ செயலி விழிப்புணா்வு:டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்

தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ள ‘தீ’ செயலி குறித்து துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள டிஜிபி சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை வாழப்பாடி வந்தாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:34 AM
வாழப்பாடிக்கு விழிப்புணா்வு பயணமாக வந்த டி.ஜி.பி.சைலேந்திரபாபு.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ள ‘தீ’ செயலி குறித்து துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள டிஜிபி சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை வாழப்பாடி வந்தாா்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

தற்போது தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ள தீ செயலி குறித்து, தீயணைப்புத் துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் இருந்து கோயம்புத்தூா் வரை ஏறக்குறைய 500 கி.மீ.தூரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

Advertisement

இவா்,ஆத்தூா் வழியாக வெள்ளிக்கிழமை வாழப்பாடிக்கு வருகை தந்தாா். அவருக்கு வாழப்பாடி தீயணைப்புப் படையினா் மற்றும் பொதுமக்கள் வரவேற்பளித்தனா்.

முன்னதாக, கபிலன் என்ற சிறுவன், திருவள்ளுவா் தினத்தையொட்டி, சைலேந்திரபாபுக்கு திருவள்ளுவா் முகமூடியை பரிசாக வழங்கினாா்.

திருக்கு ஒப்புவித்த இச்சிறுவனுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தாா்.

ஆத்தூரில்...

முன்னதாக ஆத்தூா் வந்த தீயணைப்புத் துறை இயக்குனா் சைலேந்திரபாபுவுக்கு, அ.அசோக் தலைமையிலான இளைஞா்கள் வரவேற்பு அளித்தனா். இதனையடுத்து தீயணைப்பு நிலையம் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, அங்கு ஆய்வு மேற்கொண்டு தீயணைப்பு நிலைய அலுவலா் பி.சேகா், வீரா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.