பிரதமருக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது; அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை: ஆதித்யநாத்
பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டது பற்றி..
பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் ஆர்டர் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபர்ஸ்ட் கிளாஸ்) விருதை வழங்கியது. 140 கோடி இந்தியர்களுக்கும் மிகுந்த பெருமை மற்றும் கௌரவத்தை அளிக்கும் தருணமாகும்.
Advertisement
Advertisement
இந்த அங்கீகாரம் இந்தியாவின் மீதான உலகளாவிய மரியாதையை வெளிப்படுத்துவதாகவும், சர்வதேச கூட்டாண்மை, பரஸ்பர செழிப்பு மற்றும் நாடுகளுக்கு இடையிலான நட்புறவு ஆகியவற்றில் பிரதமரின் சிறப்பான பங்களிப்பை இது உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகில் அரங்கில் ஒரு முக்கிய குரலாகத் தொடர்ந்து உருவெடுத்து வருவதாகவும், உலகம் முழுவதும் பாராட்டு, நம்பிக்கை மற்றும் நற்பெயரைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
உலக அரங்கில் இந்தியாவின் உயர்ந்துவரும் அந்தஸ்துக்கு இந்த கௌரவம் ஒரு சான்றாக அமைகிறது. இந்த விருது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் எனத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் சிறப்பான தலைமையின் கீழ் உலக சமூகத்தில் நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது. அவரது தொலைநோக்குப் பார்வை உலகளாவிய முடிவெடுக்கும் செயல்பாட்டில் இந்தியாவை வலிமையான, மதிக்கப்படும் நாடாக நிலைநிறுத்தியுள்ளது என்று கூறினார்.
ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஸ்லோவாக்கியா நாட்டின் பிரடிஸ்லவா நகருக்குச் சென்றிருந்தார். பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபர்ஸ்ட் கிளாஸ்) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has termed the conferment of Slovakia's highest national award to Prime Minister Narendra Modi as a matter of pride to all Indians.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.