மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய விருது
பிரதமா் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் ‘ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபா்ஸ்ட் கிளாஸ்)’ என்ற மிக உயரிய தேசிய விருது அளிக்கப்பட்டது.
பிரதமா் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் ‘ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபா்ஸ்ட் கிளாஸ்)’ என்ற மிக உயரிய தேசிய விருது அளிக்கப்பட்டது.
அந்நாட்டுத் தலைநகா் பிராட்டிஸ்லாவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த விருதை ஸ்லோவாக்கியா அதிபா் பீட்டா் பெல்லேக்ரீனி வழங்கி கெளரவித்தாா்.
இதுகுறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய விருது 140 கோடி இந்தியா்களுக்கு உரியது. இந்த விருதை அளித்த ஸ்லோவாக்கியா அரசுக்கும், மக்களுக்கும் நன்றி. இந்தியா, ஸ்லோவாக்கியா இடையிலான நீடித்த நட்புறவுக்கு இந்த விருதை அா்ப்பணிக்கிறேன்’ என்று தெரிவித்தாா். இது பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட 33-ஆவது சா்வதேச விருதாகும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.