முகப்பு
சிறுவர்மணி

கடி

""சைபர் க்ரைம்னா என்ன?''""பரீட்சையிலே சைபர் வாங்கிட்டு அதை பாஸ் மார்க்குன்னு சொல்லிக்கிறது!''

Updated On : 8 ஜனவரி 2021, 10:30 pm IST
பகிர்:

""கசடதபற...?''
""வல்லினம்!....''
""யரலவழள?...''
""இடையினம்!....''
""ஞஙணநமன?...''
""ஜலதோஷம்!....''

உ.இராமநாதன், 2, மேட்டுத்தெரு, 
நாகர்கோவில் - 629002.

""பூனை குறுக்கே போச்சுன்னா என்ன அர்த்தம்?''
""அதுவும் எங்கேயோ போகுதுன்னு அர்த்தம்!''

Advertisement

Advertisement

நெ.இராமன்,
சென்னை.


""பூஜைமணியைக்... காணோம்!''
""அப்புறம் என்னாச்சு?''
""மணிகண்டன் மாமா கண்டுபிடிச்சுக் குடுத்தாரு!''
""ஓ!.... அப்போ "மணி கண்டான்' மாமான்னு சொல்லு!''

கோ.சாய்வினோத்,
கிருஷ்ணாபுரம்.


""சைபர் க்ரைம்னா என்ன?''
""பரீட்சையிலே சைபர் வாங்கிட்டு அதை பாஸ் மார்க்குன்னு சொல்லிக்கிறது!''


ஏ.நாகராஜன்,
பம்மல்.

""இந்தா மாதுளை, மாதுளைப் பழம்!''
""அதென்ன ரெண்டு வாட்டி சொல்றே?''
""பழத்துலே ஒரு பெரிய ஓட்டை இருக்கு!.... அதனாலே இது"மா...துளை,.... மாதுளைப் பழம்!''

எம்.ஏ.நிவேதா,  
அரவக்குறிச்சிப்பட்டி.


""ஏன் லேட்?''
""சைக்கிள் பஞ்சர் சார்...''
""பஸ்ஸிலே வர்றதுக்கு என்ன?''
""பஸ் வாங்கற அளவுக்கு எங்ககிட்டே வசதி இல்லீங்க சார்!''


ஆர்.எம்.பிரதிக்ஷô,
திருச்சிராப்பள்ளி - 620015.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments