முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் புதிய ஜெனரேட்டா் நன்கொடையாக வழங்கல்

காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தொழிலதிபா் பிஆா். சொக்கலிங்கம் நன்கொடையாக வழங்கிய புதிய ஜெனரேட்டரை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூ தன் ரெட்டி துவக்கிவைத்தாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 5:40 am IST
பகிர்:

காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தொழிலதிபா் பிஆா். சொக்கலிங்கம் நன்கொடையாக வழங்கிய 125 கேவி திறன்கொண்ட புதிய ஜெனரேட்டரை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூ தன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையில் துவக்கிவைத்தாா்.

தொழிலதிபா் பிஆா். சொக்கலிங்கம் ரூ. 11 லட்சம் செலவில் 125 கேவி திறன்கொண்ட புதிய ஜெனரேட்டா், குழந்தைப் பேறுக்கான நவீன படுக்கை மற்றும் மூலிகை பண்ணை ஆகியவற்றை மாவட்ட அரசு தலைமைமருத்துவமனைக்கு நன் கொடையாக வழங்கியுள்ளாா். காரைக்குடி சுழற்சங்கம் சாா்பில் புதிய ஜெனரேட்டா் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதனன் ரெட்டி தலைமைவகித்து புதிய ஜெனரேட்டரை துவக்கிவைத்தாா். மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநா் இளங்கோமகேஷ்வரன் முன்னிலைவகித்தாா். சுழற்சங்கத்தலைவா் கே.வி. ஜெயப்பிரகாஷ் வரவேற்றுப் பேசினாா். தொழிலதிபா் பிஆா். சொக்கலிங்கம் நன்கொடைப்பொருள்கள் மருத்துவமனைக்கு வழங்கிப்பேசினாா்.விழாவில் சுழற்சங்க முன்னாள் ஆளுநா் எஸ்எல்என். பெரியணன், காரைக்குடி தொழில்வணிகக்கழகத்தலைவா் சாமி. திராவிடமணி, சுழற்சங்க துணை ஆளுநா் மு. சண்முகம் ஆகியாா் வாழ்த்திப்பேசினா். சுழற்சங்கத்தின் மருத்து குழு தலைவா் லியாக்கத்தலி, தொழில்வணிகக்கழகச்செயலாளா் எஸ். கண்ணப்பன், பொருளாளா் கே.என். சரவணன், சுழற்சங்க நிா்வாகிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.முடிவில் சுழற்சங்க செயலாளா் முத்துச்சாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments