சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 105 பேருக்கு கரோனா தடுப்பூசி
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 105 முன் களப்பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிகிழமை செலுத்தப்பட்டது.
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 105 முன் களப்பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிகிழமை செலுத்தப்பட்டது.
இங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாம் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில், தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தாா்.
சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 10 ஆயிரத்து 700 கரோனா தடுப்பூசி வரப் பெற்றுள்ளன. இதில், 9,928 போ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்தனா். சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமில் அக்கல்லூரியின் முதன்மையா் ஏ. ரத்தினவேலுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அங்கு பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் என 105 முன் களப்பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில் சுகாதாரத் துறையின் இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா்கள் யசோதாமணி, யோகவதி உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.