முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

பிராமணர்கள் பேசுகிற தமிழ் ஒஸ்தி! ஆராய்ச்சி முடிவு!

ஆராய்ச்சியாளர்கள் பிராமணர்கள் பேசும் தமிழ் மற்றவர்கள் பேசுவதை விட உச்சரிப்பு சுத்தமானது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

Updated On : 26 பிப்ரவரி 2016, 2:51 pm IST
பகிர்:

பிராமணர்கள் பேசும் தமிழ் மற்றவர்கள் பேசுவதை விட உச்சரிப்பு சுத்தமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

தமிழை சரியாக உச்சரிப்பது யார் என்று சர்வதேச ஆராய்ச்சி ஒன்று சமீபத்தில் நடைப்பெற்றது. தமிழை சரியாகவும் அட்சர சுத்தமாகவும் உச்சரிப்பவர்கள் பிராமணர்களதான் என்று ஆராய்ச்சி முடிவை வெளியிட்டு  அதற்கு விருதும் பெற்றுள்ளனர இந்த ஆராய்ச்சியாளர்கள். தமிழைப் பேசும் மற்றவர்களை விட அம்மொழியை அழகாகவும் மிகச் சரியாகவும் பேசுபவர்கள் தமிழ் பிராமணர்கள் தான் என்று இந்த முடிவு தெள்ளந்தெளிவாகக் கூறுகிறது.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள் மூவர குழு. ஒருவர் ஈரானிய பேராசிரியர் மற்ற இருவரும் யார்க்‌ஷயரிலுள்ள ஷெஃப்ஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். இவர்களின் ஆராய்ச்சிப்படி, தமிழ் பிராமணர்கள் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்தான ‘ழ’வை சரியாக உச்சரிக்கின்றனர். மற்ற தமிழர்களில் பலர் ழ என்பதை ல என்றும் ள் என்றும் தவறாகவே உச்சரிக்கின்றனர் என்கிறார்கள் இவர்கள். ஜனவரி 29 ம் தேதி நடைபெற்ற சர்வதேச இந்தோனேஷிய சமூக அறிவியல் மாநாட்டில் இந்த மூவர் குழு சமர்பித்த ஆராய்ச்சி சிறப்பானதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது.

Advertisement

Advertisement

இந்த ஆராய்ச்சிக்காக, பங்கேற்பாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வரவழைப்பட்டு இரு குழுக்களாக பிரிக்கப்பட்டார்கள். முதல் குழுவைச் சேர்ந்தவர்கள் முழுவதும் தமிழ் பிராமணர்கள் இரண்டாம் குழுவினர் பிராமணர் அல்லாதவர் (இந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்கள்).

தமிழ் மொழியை இவர்கள் எப்படி உள்வாங்கி உச்சரிக்கிறார்கள் என்பதை சில பரிசோதனைகள் மூலம் கேட்டும், எழுத்துப் பரிசோதனைகள மூலமும் பரீட்சித்தார்கள். முப்பது ரோமன் ஆங்கில எழுத்துருக்களை  தந்து மொழியாக்கம் செய்யச் சொன்னார்கள்.

சென்னையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராஜ் ராமசந்திரன் கூறுகையில், ‘ இந்தப் பரிசோதனையில் போது இந்த இரண்டு குழுவினரிடையே சில வித்யாசங்கள் இருந்தன. பிராமணர்கள் ரோமன் எழுத்துருவில் உள்ளவற்றை தமிழில் சரியான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். உதாரணத்திற்கு ழ என்னும் உச்சரிப்பை மிக சரியாக பிரயோகித்தவர்கள் அவர்கள் மட்டும் தான். மற்றவர்கள் ல எனவும் ள எனவும் கூறினார்கள். தவிர பிராமணர்கள் கொடுக்கப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் அழுத்தம் திருத்தமாகவும் தெளிவாகவும் அந்த வார்த்தையின் தன்மை எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே பேசினார்கள் என்றும் கூறினார் ராஜ்.

மற்ற பங்களிப்பாளர்கள் இரண்டு மொழிகளின் கலவையாக பல வார்த்தைகளை உச்சரித்தனர். பிராமணர்களைப் பொருத்தவரை வெகு சில சம்ஸ்கிருதம் கலந்த உச்சரிப்பு அவர்களுக்கும் இருந்தது. ஆனால் அவை அதிகமாக இல்லை என்றார்.

தென்காசியைச் சேர்ந்த ஆஷிக் அலி எனும் ஆராய்ச்சி மாணவர் கூறுகையில், ‘பிராமணர்கள் ப்ரபா என்னும் சொல்லை உச்சரிக்கும் போது எளிதாக அதன் உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டுமோ அதே போலவே உச்சரித்தனர்.  ஆனால் தமிழில் அது ‘பிரா’ என்ற உச்சரிப்பு நிலவுகிறது.

இந்த ஆராய்ச்சியில் பிராமணத் தமிழ் பேச்சு வழக்கில் உள்ளவற்றையும் எழுத்துருவுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் கருத்தில் கொண்டது. துல்லியமாக எழுத்தில் உள்ளவற்றை உச்சரிப்பில் கொண்டு வருவதே சுத்தமாகப் பேசும் திறன் என்று கூறினார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். பிராமணத் தமிழைப் பொருத்தவரையில் துல்லியமாக தமிழ் எழுத்துக்களை எவ்வித கலப்புமில்லாமல் பேசுகிறார்கள். பிராமணர்கள் இயல்பாகவே இப்படி எவ்வித கலப்புமின்றி பேசுவது வழக்கம்தான்.

இறுதியாக இந்த ஆராய்ச்சியின் முடிவில், பிராமணர்கள் பேசும் தமிழ் உச்சரிப்புத்தான் சுத்தமானது மிகச் சரியானது என்றும் அது மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் என்று என்றார்கள்.

(தமிழில்: உமா ஷக்தி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.