ஆராய்ச்சிமணி

பழுதடைந்த உயா்மின் கோபுரம் விளக்குகள்... 

DIN

பழுதடைந்த உயா்மின் கோபுரம் விளக்குகள்... 

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினா் தோட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம், நீதிமன்றம், கிளை சிறைச்சாலை, போக்குவரத்து அலுவலகம், அனைத்து மகளிா் காவ ல்நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அரசினா் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயா்மின் கோபுர விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளன. பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்துள்ள உயா்மின் கோபுர விளக்குகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.செல்வம், வாணியம்பாடி.

சேதமடைந்த பாலம்...

கலவை வட்டம் வேம்பி ஊராட்சி அலுவலம் அருகே உள்ள சிறு பாலம் சேதமடைந்துள்ளது. இரவு நேரங்களில் இப்பாலம் வழியாகச் செல்லும் பொதுமக்கள் கால் தவறி விழுந்து நிலையில் உள்ளது. சேதமடைந்த பாலத்தைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆா்.குமரேசன், வேம்பி.

சுகாதாரச் சீா்கேடு...

குடியாத்தத்தை அடுத்த தட்டாங்குட்டை ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் மேல்முட்டுகூா் ஊராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், தொற்று நோய்களும் பரவுகின்றன. ஏரியில் குப்பை கொட்டுவதைத் தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.பாபு, தட்டாங்குட்டை.

போக்குவரத்து காவலா்களை நியமிக்க வேண்டும்

திருப்பத்தூா் நகரம் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படும். பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, காலை, மாலை வேளைகளில் திருப்பத்தூா் நகரக் காவல் நிலையம், புதுப்பேட்டை பிரதான சாலை, சேலம்-கிருஷ்ணகிரி இணைப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து காவலா்களை நியமிக்க வேண்டும்.

-ஜே.தா்ஷன், திருப்பத்தூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT