இந்த நாளில்...

28.12.1932: திருபாய் அம்பானி பிறந்த தினம் இன்று !

DIN

திருபாய் என்று அன்புடன் அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி 28.12.1932 அன்று குஜராத் மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடாவில் 28 டிசம்பர், 1932 அன்று நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென்னுக்கும் மகனாய்ப் பிறந்தார்.

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராய் இருந்தார். 16 வயதானபோது, அம்பானி ஏமனுக்கு சென்று விட்டார். அங்கு 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர். ஏடன் துறைமுகத்தில் நிறுவனத்தின் நிரப்பும் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு திருபாய் அம்பானி உயர்த்தப்பட்டார்.

பின்னர் திருபாய் அம்பானி பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். ஏமெனில் உடன் வேலை பார்த்த தனது உறவினர் சம்பக்லால் தமானி உடன் இணைந்து "மஜின்" என்ற நிறுவனத்தை துவக்கினார். மஜின் நிறுவனம் பாலியஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. முதல் அலுவலகம் மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா தெருவில் அமைக்கப்பட்டது. தொலைபேசி, ஒரு மேஜை மற்றும் மூன்று நாற்காலிகள் மட்டுமே கொண்ட ஒரு அறையாக அது இருந்தது.

சிரித்த காலத்திற்கு பிறகு 1965-ஆம் ஆண்டில், சம்பக்லால் தமானியும் திருபாய் அம்பானியும் தங்கள் கூட்டு வணிகத்தை முடித்துக் கொண்டனர். திருபாய் 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' என்னும் தனது சொந்த நிறுவனத்தைத் துவக்கினார். அதன பிறகு அந்த நிறுவனம் இந்திய தொழில் துரையின் முக்கிய  நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.

பல்வேறு உச்சங்களை எட்டிய திருபாய் அம்பானியை ஜூன் 24, 2002 அன்று ஒரு பெரும் மாரடைப்பு தாக்கியது. மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது அவருக்கு இரண்டாவது மாரடைப்பு. பிப்ரவரி 1986-ஆம் ஆண்டில் வந்திருந்த முதலாவது மாரடைப்பில் அவரது வலது கை செயலிழந்திருந்தது. ஒரு வாரத்திற்கும் அதிகமாக சுயநினைவற்ற கோமா நிலையில் இருந்த அவர் ஜூலை 6, 2002 அன்று இரவு சுமார் 11.50 மணியளவில் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT