கவிதைமணி

இன்றைய தாலாட்டு: பெருமழை விஜய்

கவிதைமணி
தாலாட்டுப்   பாடியுன்னைத் தூங்க வைக்க மனசில்லை!தற்போதைய சூழ்நிலையில் நீ தூங்குவதும் சரியில்லை!எல்லாமே   தமிழ்நாட்டில்    ஏகமாய்க்    கெட்டிடுச்சுஎப்படித்தான்  உன்வாழ்வு   இந்நாட்டில் கழிந்திடுமோ?தற்காலத்    தாய்மார்கள்   தாலாட்டை   அறியவில்லை!தம்பி தங்கைகளே! நீங்கள்   பிறந்த இடம் நலமில்லை!எங்கணுமே பெரு ஊழல்!  எல்லா    அலுவல்களுக்கும்லஞ்சம்   கொடுத்தால்தான்   நம் வேலை    எளிதாகும்!பாசம் இங்கு கொறைஞ்சிடுச்சு!பரிதாபம் நெறைஞ்சுடுச்சு!மக்கள்   பெயர்   சொல்லி    மந்திரிகள்     வாழுகின்றார்!வெட்கமின்றி    தம் சொத்தை விபரமாய்ச்    சேர்க்கின்றார்!கல்வியைக்  காசாக்கி  மக்களைக்  கசக்கிப்  பிழிகின்றார்!சொத்திருந்தோர்   அன்றைக்குச்   சுயநலம்   பார்க்காமல்எல்லார்  நலம்    பேண   ஏகமாய்ச்   செலவு    செய்தார்!இன்றைய  தலைவர்களோ   எல்லாமும்   தமக்கேயென்று சுரண்டி   வாழ்கின்றார்!  சுய   நலத்தில்    வீழ்கின்றார்!அளவாய்த்    தூங்கி   நீ    அகிலம் காக்க    வேண்டும்!தமிழ் நாட்டின் தலைவிதியைச் சத்தியமாய் மாற்ற வேண்டும்!பொதுச் சொத்தை நுகர்வோரை பொதுவிடத்தில் கட்டிவைத்துசாட்டையடி கொடுக்க வேண்டும்!மக்கள் சங்கடங்கள் தீர்க்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT