கவிதைமணி

மறு ஜென்மம்:   த.அஸ்வின் குமார்

கவிதைமணி

பிறப்பு மட்டும் மறு ஜென்மம் அல்ல
இந்த உலகில் ஒவ்வொரு பொழுதும்
மறுஜென்மமே.

ஒரு வேளையின் முடிவு தான்
மற்றொரு வேளைக்கு மறு ஜென்மம்
மரத்திற்க்கும் உண்டு மறு ஜென்மம்
பூவின் மறு ஜென்மம் காய்:
காயின் மறு ஜென்மம் கனி
கனியின் மறு ஜென்மம் விதை:
விதையின் மறு ஜென்மம்
இன்னொரு மரம்.

உயிருள்ள பொருளுக்கு மட்டும் அல்ல
மறுஜென்மம்
உயிரில்லாத பொருளுக்கும் உண்டு
மறுஜென்மம்

ஒரு பொருள் உடைந்தால்
மறுபொருளாகிறது.அது
அதன் மறு ஜென்மம்.

ஒரு தாய்க்கு பிரசவம்
இருவருக்கு மறு ஜென்மம்.
தோல்வியைக் கண்டு
துவண்டு விடாதே மானிடா
எதிர்த்து நில் வெற்றி நிச்சயம்.!

உயிரில்லா பொருளுக்கே
மறுஜென்மம் இருக்கும் பொழுது
உன் தோல்விக்கு இன்று
மறுஜென்மம் என்று நினை.
தோல்வியின் மறுஜென்மமே வெற்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT