நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

செ.குளோரியான்

வாராய், உன் திருப்பாத மலர்க்கீழ்ப்
பேராதே யான் வந்து அடையும்படி
தாராதாய், உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய், எனக்கு என்றும் எக்காலே.

எம்பெருமானே, உன்னுடைய மலர்போன்ற திருவடிகளின் கீழ் நான் வந்து தங்க வேண்டும், அங்கிருந்து நீங்காமல் நிலைத்திருக்க வேண்டும், அத்தகைய வரத்தை எனக்கு இன்னும் தராமலிருக்கிறாயே, உன்னை நான் எனக்குள் வைக்க விரும்புகிறேன், ஆனால் நீ வந்து அவ்வாறு தங்காமலிருக்கிறாயே, எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நான் வேண்டுவது உன்னைத்தான், வந்து அருள்செய்வாய்!

•••

பாடல் - 8

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில், மற்று
எக்காலத்திலும் யாதுஒன்றும் வேண்டேன்,
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக்கனியே, உன்னை யானே.

சிறந்தவர்கள், வேதம் அறிந்த குற்றமற்றவர்களால் விழுங்கப்படும் என்னுடைய பெருமானே, சர்க்கரைப் பழமே, நீ எங்கள் தந்தையாக எக்காலமும் எனக்குள் நிலைத்திருக்க வேண்டும், அவ்வாறு நீ நிலைத்திருந்தால், எனக்கு அதுவே போதும், நான் உன்னிடம் எப்போதும், வேறு எந்த வரமும் கேட்கமாட்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT