நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3

செ.குளோரியான்

காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண்துயிலாய், நெஞ்சுஉருகி ஏங்குதியால்,
தீ முற்றத் தென்இலங்கை ஊட்டினான் தாள்நயந்த
யாம்உற்றது உற்றாயோ! வாழி! கனைகடலே!

ஒலியெழுப்பும் கடலே, நீ எதன்மீதோ விருப்பம் வைத்திருக்கிறாய், அதனால் துன்பப்படுகிறாய், இரவும் பகலும் நீ தூங்குவதே இல்லை, நெஞ்சுருகி ஏங்குகிறாய், என்ன ஆயிற்று? நீயும் எங்களைப்போல் எம்பெருமான் மீது நேசம்கொண்டாயோ? இலங்கையைத் தீக்கு உணவாக்கிய அந்தப் பெருமானின் திருவடிகளை எண்ணித் துன்புற்றாயோ? நீ வாழ்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT