நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9

செ.குளோரியான்

பாடல் 9

பூந்துழாய் முடியார்க்கு, பொன் ஆழிக் கையாருக்கு,
ஏந்து நீர் இளம் குருகே, திருமூழிக்களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணைமலர்க்கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவு அன்றே என்று உரையீரே.

நீராலே ஏந்தப்படுகிற இளம் குருகே, பூந்துழாயைத் திருமுடியிலே அணிந்தவர், அழகிய சக்ராயுதத்தைக் கையில் ஏந்தியவர், திருமூழிக்களத்திலே எழுந்தருளியிருப்பவர், எம்பெருமான், அப்பெருமான் என்னுடைய நகையேந்திய மார்பகங்களை நிறம்மாறச்செய்கிறார், என்னுடைய மலர்போன்ற இரு கண்களிலிருந்தும் நீர் ததும்பும்படி என்னைக் கொண்டுசெல்கிறார், இது அவருக்குத் தகுதியானதில்லை என்று நீங்கள் அவரிடம் சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT