நூல் அரங்கம்

பெரியார் 95

ஞான வள்ளுவன்

பெரியார் 95 - ஞான வள்ளுவன்; பக்.464; ரூ.300; இனியன் பதிப்பகம், வைத்தீசுவரன் கோயில்; )04364 - 279134.
ஈ.வெ.ரா.பெரியாரின் வாழ்க்கை வரலாறு, இந்நூல். அவர் சிறுவயதில் அவர் செய்த குறும்புகள், வாலிப வயதில் அவருக்கிருந்த தீய பழக்கங்கள், அவற்றை அவர் கைவிட்டது, பொறுப்பான வணிகராக, நகராட்சி தலைவராக அவர் செயலாற்றியது, காங்கிரஸில் சேர்ந்தது, மதுவிலக்கை ஆதரித்துப் போராடியது, வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தது, 
சுயமரியாதை இயக்கம் கண்டது, மணியம்மையைத் திருமணம் செய்தது, தி.மு.க. உதயமானது, காமராசரை பெரியார் ஆதரித்தது என அவருடைய 95 ஆண்டுகால வாழ்க்கை, தமிழகத்தின் அரசியல் வரலாற்றுடன் இணைந்து சென்றதை நூல் விவரிக்கிறது.
பல விஷயங்களில் பெரியாரின் வித்தியாசமான அணுகுமுறைகள் வியப்பளிக்கின்றன.
1930 இல் நடந்த உப்புக் காய்ச்சும் போராட்டத்தால், "இந்தியாவுக்கு ஒரு வளைந்துபோன குண்டூசியளவு கூட நன்மை கிடைக்காது' என்று அவர் கூறியது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர், தி.மு.க.வினர் அந்தப் போராட்டத்தை நடத்தியபோது, "இதனைப் பயன்படுத்தி விரைவில் பதவிக்கு வர வேண்டும் என்று கண்ணீர்த்துளிகள் நினைக்கின்றனர்' என்று கூறியது, அண்ணாதுரையின் ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தால் "மிக்க நட்டம் ஏற்படும். இந்த அரிசி விலைகுறைப்பே நியூசன்ஸ். அனாவசியத் தொல்லை' என்று சொன்னது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 
என்றாலும், தன் எதிர்ப்பாளர்களிடம், ""என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், என் அபிப்பிராயங்களை வெளியிட எனக்கு உரிமை உண்டு'' என்று அவர் கடைசி வரை தன் கருத்தில் உறுதியாகவும், பிறர் கருத்தை மதிப்பவராகவும் இருந்திருக்கிறார். பெரியாரின் வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் எதுவும் விடுபட்டுப் போகாமல் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் நூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT