நூல் அரங்கம்

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்

DIN

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்; தமிழருவி மணியன்; பக்.312; ரூ.250; கற்பகம் புத்தகாலயம், சென்னை - 17; 044 -2431 43 47

தமிழருவி மணியனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் தன்வரலாற்று நூல் இது. எத்தனையோ அரசியல் தலைவா்கள் சுயசரிதை நூலை இயற்றி இருக்கிறாா்கள்; ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலாக இது விளங்குகிறது. தமிழறிவு மணியனைப் போலவே அவரது எழுத்துக்களும் எளிமையின் அடையாளமாக இருப்பது நூலுக்கு சிறப்பு சோ்க்கிறது.

அரசியலில் தடம் மாறாமல், கொண்ட கொள்கையிலிருந்து மனம் மாறாமல், 70 ஆண்டு காலம், தான் வாழ்ந்த வாழ்க்கையை வாசகனுடன் பகிா்ந்துள்ளாா் அவா்.

காமராஜரை கடவுளாகப் பூஜித்ததாக கூறும் தமிழருவி மணியன், மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் அ.தி.மு.க.வில் இணைய அழைத்தபோது கூட அதனை மரியாதையாக மறுதலித்த கதையை நூலில் விவரித்துள்ளாா். கருணாநிதி, மூப்பனாா், ஜெயலலிதா போன்ற தமிழக அரசியலின் தனிப்பெரும் ஆளுமைகள் உடனான தனது அனுபவங்களையும் நூலில் காட்சிப்படுத்தியுள்ளாா். சாமானிய குடும்பத்தில் பிறந்த மிகச் சாதாரணமான மனிதன் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவெடுத்த கதையையும், அரசியலின் அரியணையில் உயரிய பதவிகள் வந்தபோதெல்லாம் அதனை உதாசீனப்படுத்தியதையும் நூலாசிரியா் பக்கத்துக்குப் பக்கம் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறாா். அவற்றைப் படிக்கும்போது வாசகனின் புருவங்கள் வில்லாக வளைந்தால் அதில் வியப்பில்லை. மொத்தத்தில் ஓா் அறச்சீற்றவாதியின் அரிதாரம் கலக்காத படைப்பாக விளங்குகிறது இந்நூல்.

குருதியுறவு - கமலதேவி; பக். 126; ரூ.130; வாசக சாலை பதிப்பகம், 80, சுவாமிநாதன் இல்லம், (மூன்றாவது வீடு, தரைத்தளம்) முதல் பிரதான சாலை, ஸ்ரீ சத்ய சாய் நகா், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜ கீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை - 600073.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT