நூல் அரங்கம்

சில பெண்கள் சில அதிர்வுகள்

DIN

சில பெண்கள் சில அதிர்வுகள் - வேத, இதிகாச, புராண காலங்களில் - ஹேமா பாலாஜி; பக்.184; ரூ.140; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044 - 2489 6979.
 தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
 யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.
 எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் பொய் சொல்லாத ஹரிச்சந்திரனின் பெருமைகள் எல்லாருக்கும் தெரியும். " ஹரிச்சந்திரனுக்கு ஈடாக அதற்கும் மேலும் துன்பங்களைத் துயரங்களைக் கடந்து வந்தவள் சந்திரமதி.
 அத்தனை துன்பத்திலும் ஒரு நொடி கூட "தன் கணவனின் கொள்கையால்தானே தனக்கு இந்த இடர்' என்று சிறிதும் நினையாதவளாய் சத்திய விரதத்தை அவளும் கடைப்பிடிக்கிறாள்' என்று சந்திரமதியின் பெருமையைப் பேசுகிறது இந்நூல்.
 குள்ளமான அழகில்லாத அகத்தியரின் உருவத்தைப் பற்றி நினைக்காமல் அவரின் ஞானத்துக்காக அவரை மதித்து, அவரை மணந்து கொண்டு வாழ்ந்த லோபமுத்ரா, கணிகையர் குலத்தில் பிறந்தாலும், பிறப்பால் சமூகம் நிர்ணயித்த எல்லாத் தடைகளையும் மீறி துறவியான மணிமேகலை, தனது கணவனை தனது அண்ணனான ராவணன் போரில் கொல்ல, அதற்குப் பலி வாங்க நினைத்து, அதற்காகப் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி ராவண வதத்தை நிகழச் செய்த சூர்ப்பனகை என வித்தியாசமான கோணத்தில் வேத, இதிகாச, புராண காலப் பெண்களைப் பார்த்து அவர்களின் பெருமைகளைப் பேசும் சிறந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT