வலைப்பூ

வாழ்க்கைத் துணையை கைப்பிடிக்கும் முன் இதைக் கொஞ்சம் படிக்கலாமே

DIN


திருமணத்தை கரம் பிடித்தல் அல்லது கைபிடித்தல் என்ற வார்த்தைகளால் கூட நாம் அழைப்பது உண்டு. உண்மையிலேயே திருமணத்துக்கும் கரம்பிடித்தலுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்திருக்கிறோமா?

இந்து திருமணங்களில் முகூர்த்தம் முடிந்ததும், மணமகனின் வலது கை சுண்டு விரலுடன் மணப்பெண்ணின் வலது கை சுண்டு விரலை கோர்த்து விடுவார்கள். இதைத்தான் கரம்பிடித்தல் என்று சொன்னார்களோ? அதற்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் உண்டு.

நமது மூதாதையர்கள் செய்த, ஏற்படுத்திய எத்தனையோ பழக்க வழக்கங்களில் ஏராளமான அறிவியல் உண்மைகள் இருந்தன. ஆனால் அவை எழுத்தில் பொறிக்கப்படாததால், அடுத்த சந்ததியினருக்கு ஆதாரப்பூர்வமாக கூற முடியாமல், அதனை பின்தொடராமல் விட்ட சந்ததிகளாக நாம் அலைகிறோம்.

இதையெல்லாம் தாண்டி, கரம்பிடிப்பதில் உள்ள சூட்சுமங்கள் மற்றும் அறிவியல் உண்மைகள் பற்றி கொலம்பியா ஏஜிங் மையத்தின் பேராசிரியர் வேகார்ட் ஸ்கிர்பெக் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல்கள் சற்று சுவாரஸ்யமானவைதான்.

அதாவது, கையோடு கை சேர்க்கும் போது, அல்லது கை குலுக்கும்போது மிக மெதுவாக அல்லது பட்டதும் படாததும் போல கரம் பற்றும் ஆண்களை  விட, மிக அழுத்தமாக கரம் பற்றும் ஆண்களைத்தான் பெண்கள் மணக்க விரும்புகிறார்கள் என்பது முதல் சுவாரஸ்யம்.

அழுத்தமாக கரம் பற்றுவதில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு இதோ பதில்.. அழுத்தமாக கரம் பற்றுவோரின் உடல் நலம், சுதந்திரமாக செயல்படும் திறன், தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் உடலின் ஆற்றல் என பல விஷயங்கள் வெளிப்படுவதாகக் கூறுகிறது இந்த ஆய்வு.

ஆனால், இதே விஷயம் பெண்களுக்கு எந்த வகையிலும் பொருந்தவில்லை என்றும், பெண்களுக்கு அழுத்தமாகக் கரம் பிடிப்போரை மணக்கவே பிடிக்கிறது என்ற ஒரு தகவல் மட்டுமே பெண்களிடம் இருந்து கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் ஒரு சின்ன தகவல்தான்.. இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படவில்லை என்றாலும் அவர்களது முதல் கருத்தோடு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்று பார்க்க மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதாவது, வயதானவர்களிடம் நடத்தப்பட்ட இந்த கரம்பிடித்தல் சோதனையில், மென்மையாக கரம்பிடித்த சிலருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் அது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT