முகப்பு
தமிழ்நாடு

ருசியான மாதுளம்  பழம்  பொங்கல்

பொங்கலுக்கு ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டுமா இதோ மாதுளம் பழம் பொங்கல் செய்து பாருங்களேன்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:20 am IST
பகிர்:

தேவையானவை:

மாதுளை  முத்துக்கள்  - 2 கிண்ணம்
பச்சரிசி -  முக்கால்  கிண்ணம்
பனங்கற்கண்டு - அரை கிண்ணம்
முந்திரி, பாதாம் -  தலா  10
நெய் -  2  தேக்கரண்டி

செய்முறை:  

Advertisement

Advertisement

பச்சரிசியை,  வாணலியில்  சிவக்க  வறுத்துக் கொள்ளவும். பின்னர்,  மாதுளம் முத்துக்களை   மிக்சியில்  அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். பனங்கற்கண்டுடன்  2 கிண்ணம்  தண்ணீர்  சேர்த்து,   அடுப்பில் வைக்கவும். கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.  முந்திரி, பாதாமை, கரகரப்பாக பொடிக்கவும். ப்ரெஷர் பேனில், பச்சரிசி, மாதுளம் சாறு, பனங்கற்கண்டு, தண்ணீர், பொடித்த பாதாம், முந்திரி, நெய் சேர்த்து கலக்கவும். 3 விசில் விடவும். பின்னர்,  திறந்து, நன்கு கிளறி, மாதுளம் முத்துக்களால்  அலங்கரித்து  பரிமாறவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments